கடந்த 1999 ஆம் ஆண்டில் கே. எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் படையப்பா. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தற்போது இந்த படம் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு மறு வெளியீடாக இருக்கின்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் அனுபவங்களை நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்து உள்ளார்.
அதன்படி அவருடைய வீடியோவில், இந்த படத்தின் தலைப்பு நான் வைத்தது தான். ஆனாலும் ரவிக்குமார் சார் இது புதிதாக இருக்கின்றதே என்றார். அவரை அப்போது சமாதானப்படுத்தினேன்.

பொன்னியின் செல்வன் கதை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில் நந்தினியின் கேரக்டர் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதற்காக நான் உருவாக்கிய படம் தான் படையப்பா. கதையை ரவிக்குமாரிடம் கொடுத்து திரைக்கதையை எழுதச் சொன்னேன்.
நந்தினியை மையமாக வைத்து உருவாக்கிய நீலாம்பரி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடிக்க வேண்டும் என விரும்பினேன். ஏனெனில் அவரது கண்கள் அவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும். பிறகு அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை என தெரிந்ததும் மற்ற நடிகைக்கு சென்றோம்.
தெலுங்கில் இருந்த ரம்யா கிருஷ்ணனை எனக்கு அறிமுகம் செய்தார் ரவிக்குமார். எனக்கு பெரிதாக பிடிக்கவில்லை அரை மனதுடன் தான் ஒப்புக்கொண்டேன். அந்த நீலாம்பரிய கேரக்டர் ஹிட் அடித்தால் தான் படமே ஹிட் அடிக்கும் அதனால் தான் தயக்கம் காட்டினேன்.
மேலும் சிறிது எடையை கூட்டினால் நன்றாக இருக்கும் என்று ரவிக்குமார் சாரும் என்னை சமாதானம் செய்தார். அதற்குப் பிறகு லுக் டெஸ்ட் எடுத்தோம். எல்லாமே நன்றாக அமைந்தது.
இதை தொடர்ந்து சிவாஜி சாரை நடிக்க வைக்கலாம் என்று அவரிடம் ஒப்புதல் வாங்கினோம். ஐந்து நாள் படப்பிடிப்புக்கு அவர் அதிகமாக சம்பளம் கேட்டார். ஆனாலும் அடுத்த நாளே முழு சம்பளமும் கொடுத்தோம் என தெரிவித்துள்ளார்.
Listen News!