• Nov 05 2025

விஜய் கண்டிப்பாக இதற்கு சரியாக இருப்பார்- மார்வெல் நிகழ்ச்சியில் ஓபனாகப் பேசிய சமந்தா

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் கடந்த மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசான லியோ படம் 500 கோடி ரூபாய்களை தாண்டி சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூலித்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி அனைத்து மொழிகளிலும் ரசிகர்களிடையே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.இந்தப் படத்தின் சக்சஸ் மீட் கடந்த 1ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிலையில், விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். 


நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யங்களை ரசிகர்கள் பார்க்க முடிந்தது. வழக்கமாக இசை வெளியீட்டின்போது குட்டிக் கதை சொல்லி ரசிகர்களை கவரும் விஜய், இந்தப் படத்திற்கான இசை வெளியீடு நடக்காத நிலையில், சக்சஸ் மீட்டில் தன்னுடைய குட்டி ஸ்டோரியை சொல்லி அசத்தினார்.

இது ஒரு புறம் இருக்க ஹைதராபாத்தில் நடைபெற்ற மார்வெல் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து கொண்டு வந்திருந்து ரசிகர்களைக் கவர்ந்தார்.


இதில் பேசிய சமந்தாவிடம் இந்திய நடிகர்கள் மார்வெல் படத்தில் இணைந்து நடித்தால் யாரெல்லாம் தகுதியானவர்கள் என நினைக்கிறீங்க என்கிற கேள்விக்கு நடிகை சமந்தா சட்டென அல்லு அர்ஜுன், விஜய், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் கச்சிதமாக இருப்பார்கள் எனக் கூறியுள்ளார். நடிகர் விஜய் பற்றி சமந்தா சொல்லி உள்ள நிலையில், அந்த வீடியோ க்ளிப்பை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement