• Jan 19 2025

செழியனை தனியாக அழைத்து வெளுத்து வாங்கிய பாக்கியா- வீட்டிற்காக ராதிகா செய்த காரியம்- கடும் கோபத்தில் இனியா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

இனியா காய்ச்சலால் தவிக்க, ஈஸ்வரி பாக்கியா எங்க போய்ட்டா ஒரு குழந்தைக்கு உடம்பு சரியில்லை, அதைக் கூட அவளுக்கு கவனிக்க டைம் இல்லையா என்று திட்டுகின்றார்.அப்பிறம் அமிர்தா மாத்திரை போடாமல் இருந்தால் எப்படி காய்ச்சல் குறையும் என்று சொல்கின்றார்.


அந்த நேரம் பார்த்து பாக்கியா வீட்டுக்குள் வருகின்றார்.அப்போது இனியா உனக்கு தான் என்னைப் பற்றி கவலை இல்லையே என்று திட்ட பாக்கியா சமாதானம் செய்கின்றார்.பின்னர் அங்கிருக்கும் செழியனை அழைத்து உன் கூட பேசனும் வா என்று தனியாக கூட்டிட்டு போகின்றார். ரூமுக்குள் தனியாக கூட்டிட்டு போய் இப்ப தான் மாலினியைப் பார்த்திட்டு வந்தேன் என்கின்றார்.

அப்போது செழியன் எனக்கு எதுவும் தெரியாதம்மா நான் எதுவும் பண்ணல என்கின்றார். இதனால் கோபப்பட்ட பாக்கியா போட்டாவை எடுத்துக் காட்டி விட்டு செழியனை போட்டு அடிக்கின்றார் அப்பாவுக்கு புள்ளை அப்பிடியே தப்பாமல் பிறந்திருக்கு,மரியாதையாக நீ இந்த விஷயத்தை ஜெனிகிட்ட சொல்லி மன்னிப்புக் கேள் என்கின்றார்.


இதனால் செழியன் அதிர்ச்சியில் இருக்கின்றார். தொடர்ந்து கிச்சனில் பாக்கியாவும் செல்வியும் இருந்து பேசிட்டு இருக்கும் போது,ராதிகா தான் வாங்கிக் கொண்டு வந்த பொருட்களை ஒவ்வொரு டப்பாவுக்குள்ளும் போடுகின்றார். அத்தோடு பாதி பொருட்கள் காலியான மாதிரி இருக்கு அதான் வாங்கிட்டு வந்தேன்.நானும் சமைக்கிறனான் எனக்கும் இடையில டைம் தந்தால் கோபிக்கும் எனக்கும் சமைச்சிடுவேன் என்கின்றார்.

அப்போது அங்கு வரும் எழில் பாக்கியாவுக்கு பணம் கொடுக்க பாக்கியா அதெல்லாம் வேணாம் நீயே வைச்சுக்கோ, நிலா உன்னைத் தேடுறா,நீ உள்ளே போ என்று அனுப்பி வைக்கின்றார். பின்னர் செழியன், மாலினி விசயம் பற்றி ஜெனியிடம் சொல்ல போகின்றார். ஆனால் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளே சொல்லி மன்னிப்புக் கேட்கின்றார்.


பின்னர் பாக்கியா, ஈஸ்வரிக்கு மட்டும் காப்பி கொண்டு வந்து கொடுக்கின்றார்.இதனால் ஈஸ்வரி தனக்கு காப்பி வேணாம் என்று சொல்ல,கோபி தனக்கு ராதிகா போட்டுத் தந்து காபி குடித்து விட்டதாக சொல்கின்றார்.இப்படி பேசிட்டு இருக்கும் போது மாலினி திடீரென வீட்டுக்கு வந்து அதிர்ச்சி கொடுக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.





Advertisement

Advertisement