• Jan 19 2025

தமிழருக்காக குரல் கொடுத்த விஜய்.. மீதமுள்ளோர் யாரை கண்டு பயப்படுகிறார்கள்? அதிமுக சாட்டை

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயம் தான் கள்ளக்குறிச்சி விவகாரம். இதில் தற்போது வரையில் 33 பேர் பலியாகியுள்ளதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவ்வாறு விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் தனது கண்டனத்தை நேரடியாகவே தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நடிகர் விஜய் மட்டுமே நேரடியாக கண்டனம் தெரிவித்த நிலையில், ஏனைய நடிகர் எல்லாரும் அமைதி காத்து வருகின்றார்கள். இவர்கள் யாரைக் கண்டு அஞ்சுகின்றனர் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் அவர் கூறுகையில், கள்ளச்சாராயம் குடித்து மரணித்தோர் பற்றி திரைத்துறையை சார்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை. ஆனால் விஜய் மட்டும் தான் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்டு தமிழர்களுக்காக குரல் கொடுத்துள்ளார் மீதமுள்ள நடிகர்கள் யாரை கண்டு அஞ்சுகின்றார்கள்?

மானத் தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையினரை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement