• Dec 05 2023

விரைவில் முடிவுக்கு வரவுள்ள விஜய் டிவி சீரியல்! உடனடியாக அறிவிக்கப்பட்ட முடிவுத் திகதி

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக காணப்பட்ட 'தென்றல் வந்து என்னைத் தொடும்' சீரியல்  சில மாதங்களாக டி.ஆர்.பி ரேட்டிங்கில் சரிவைச் சந்தித்துள்ளது. இதை அடுத்து  இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.

அதன்படி, இந்த சீரியலின் முடிவு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதன் க்ளைமாக்ஸ் எபிசோடு ரெடியாக இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆகஸ்ட் 2021-ல் ஆரம்பிக்கப்பட்ட  இந்த சீரியலில் வினோத் பாபு மற்றும் பவித்ரா ஜனனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் சசிந்தர் புஷ்பலிங்கம், பெரோஸ் கான், மரியா ஜூலியானா மற்றும் பவித்ரா ஜனனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இவ்வாறான நிலையில், 'தென்றல் வந்து என்னைத் தொடும்' சீரியலின் முடிவுத் திகதியை அறிவித்துவிட்ட சீரியல் குழுவினர்,  தற்போது க்ளைமாக்ஸ் எபிசோட்களை படமாக்கி வருகின்றனர். 


அதேவேளை,தென்றல் வந்து என்னைத் தொடும்' சீரியலின் க்ளைமாக்ஸ் விரைவில் ஒளிபரப்பப்பட உள்ள நிலையில், ரசிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதேவேளை,  'தென்றல் வந்து என்னைத் தொடும்' சீரியல்  இதுவரையில் 650 எபிசோட்களுக்கு மேல் ஒளிபரப்பப்பட்ட நிலையில், இந்த சீரியல் நவம்பர் 11-ம் திகதி மாலையுடன் முடிவடையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement