• Dec 04 2023

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவது யார்? ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட ட்விஸ்ட்! சற்றுமுன் கசிந்த தகவல்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.பிரதீப்பிற்கு ரெட் காட் கொடுக்கப்பட்ட விஷயம் தான் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் சோஷியல் மீடியாக்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இவ்வாறான நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனின் ஓட்டிங் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது  வெற்றிகரமாக 6-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதில் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி தனது தரப்பு நியாயத்தை சொல்ல வாய்ப்பு கூட கிடைக்காமல் வெளியேற்றப்பட்டார். 


அவர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவர் சார்பில் பல்வேறு விவாதங்கள், பேச்சுக்கள் என்பன தொடர்ந்து வருகின்றது.

இவ்வாறான நிலையில், பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களின் ஓட்டிங் லிஸ்ட் வெளியாகியுள்ளது.அதில் முதல் மூன்று இடங்களையும் அர்ச்சனா, விசித்தரா, ,தினேஷ் ஆகியோர் பெற்று முன்னிலையில் உள்ளனர்.

இவர்களை தொடர்ந்து பிராவோ, ஐசு, பூர்ணிமா ஆகியோர் பெற்று இறுதி நிலையில் உள்ளனர். இவர்களில் தற்போது வரை பூர்ணிமா மற்றும் ஐசு ஆகிய குறைவான ஓட்டுகளை பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களில் ஒருவரே அல்லது இருவருமே இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆகவே பொறுத்திருந்து பார்ப்போம்.இம்முறை யார் வெளியேறுவது என..

Advertisement

Advertisement

Advertisement