• Oct 13 2024

விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு பரிசு.. அறிவிப்பு வெளியிட்ட அரசியல்வாதிக்கு தீர்ப்பு..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு 1000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என அரசியல்வாதி ஒருவர் அறிவித்திருந்த நிலையில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி , தேவர் ஐயா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது சமூக வலைத்தளத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மிரட்டல் விடுக்கும் வகையில் ஒரு பதிவை செய்திருந்தார்.

அந்த பதிவில் ’திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, தேவர் ஐயா அவர்களை இழிவு படுத்தியதற்காக அவரை உதைப்பவருக்கு ரொக்கப் பரிசு ரூபாய் 1000 வழங்கப்படும் என்று பதிவு செய்திருந்தார்.



இது குறித்து விஜய் சேதுபதி தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கோவை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அமைதியை சீர்குலைக்கும் வகையில் வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல், இரு தரப்பினரிடையே மோதலை உருவாக்குதல் ஆகிய பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது விஜய் சேதுபதியை மிரட்டியதாக அர்ஜுன் சம்பத் ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement