• Sep 14 2024

ஆர்த்தியுடன் மனக்கசப்பு.. ஜெயம் ரவியின் அதிரடி முடிவு.. கண்டுகொள்ளாத குடும்பத்தினர்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் மன வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிய போகிறார்கள் என்றும், விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்றும் செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. ஆனால் இந்த செய்திக்கு மறுப்பும் தெரிவிக்காமல், ஒப்புதலும் தெரிவிக்காமல் இருவரும் அமைதி காத்த  நிலையில் உண்மையில் இருவரும் பிரிந்து விட்டார்களா? அல்லது சேர்ந்துதான் வாழ்கிறார்களா? என்று திரை உலகில் உள்ள பலருக்கு தெரியவில்லை.

இந்த நிலையில் வரும் தீபாவளி அன்று ’பிரதர்’ என்ற திரைப்படத்தை ரிலீஸ் செய்ய இருக்கும் ஜெயம் ரவி, அடுத்ததாக ’ஜெனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்தது. அதுமட்டுமின்றி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ’காதலிக்க நேரமில்லை’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இன்னும் இரண்டு படங்களை அவர் கைவசம் வைத்து இருக்கிறார்.



இந்த நிலையில் திடீரென ஆர்த்தி உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஜெயம் ரவி தனிமையில் இனிமை காண கோவா சென்று விட்டதாக கூறப்படுகிறது. வீட்டில் உள்ள யாரிடம் சொல்லாமல் அவர் திடீரென கோவா சென்று விட்டதாகவும் அங்கு அவர் தனது மனக்கவலை எல்லாம் மறக்கும் வகையில் ஜாலியாக சுற்றிக் கொண்டு இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

ஜெயம் ரவியின் குடும்பத்தினரும் அவர் ரிலாக்ஸ் ஆக சில நாட்கள் இருந்து விட்டு வரட்டும் என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகவும் கோவாவில் சலிப்படையும் வரை இருந்து விட்டு அதன் பின்னர் தான் சென்னை திரும்ப இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது

ஆனால் அதே நேரத்தில் ஜெயம் ரவி கோவாவுக்கு தனிமையில் செல்லவில்லை என்றும் அவருடன் ஒரு நெருக்கமான நபர் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement