• Feb 23 2025

அஜித் போல முன்னாடியே போயிருக்கலாம்.. வெற்றி துரைசாமிக்கு அஞ்சலி செலுத்த போன விஜய்க்கு சிக்கல்

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

 முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சமீபத்தில் ஆற்றில் விழுந்து காலமான நிலையில் அவருக்கு அஜித் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஆனால் விஜய் அஞ்சலி செலுத்த சென்ற போது கூட்டம் காரணமாக திரும்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  

வெற்றி துரைசாமி தனது நண்பர்களுடன் இமாச்சல பிரதேச மாநிலத்தில் காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் அவர் சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கார் டிரைவர் உயிரிழந்த நிலையில் ஆற்றில் காணாமல் போன வெற்றி துரைசாமியை தேடும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

தன் மகன் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக சைதை துரைசாமி அறிவித்திருந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று விமானம் மூலம் அவருடைய உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் இறுதி சடங்கு செய்யப்பட்டது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிலையில் வெற்றி துரைசாமியின் நெருங்கிய நண்பர்களி ல்  ஒருவரான அஜித் நேற்று  அவருடைய வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். ஷாலினி அஜித் நாள் முழுவதும் வெற்றி துரைசாமி வீட்டில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் நேற்று மாலை விஜய், சைதை துரைசாமி வீட்டிற்கு சென்றபோது அதிக கூட்டம் இருந்ததால் அவரால் செல்ல முடியவில்லை என்றும் அதன் பின்  புஸ்ஸி ஆனந்த் மட்டும் சைதை துரைசாமி சந்தித்து ஆறுதல் கூறியதாகவும்  விஜய் வந்து திரும்பியதை அவரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement