• Jan 19 2025

அப்பா மீதான பண மோசடி.. சூரியை சரிக்கட்டிவிட்டாரா விஷ்ணு விஷால்?

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

 நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது நடிகர் சூரி மோசடி புகார் அளித்திருந்த நிலையில் அந்த பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டு விட்டது என விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காவல்துறையில் அளித்த புகாரில் விஷ்ணு விஷாலின் தந்தை தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் பண மோசடி செய்து விட்டதாக தெரிவித்திருந்தார். இந்த புகாரை அடுத்து அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் அதன் பின்னர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியில் சூரியை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம் என்றும் அந்த பேச்சு வார்த்தையில் எங்களுக்குள் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். சூரி தரப்பில் இருந்து சில விஷயங்கள் சொன்னதாகவும் எங்கள் தரப்பிலிருந்து நாங்களும் சில விஷயங்களை சொன்னோம் என்றும் இருவரும்  ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம் என்றும் எங்கள் இருவருக்கும் இடையே மூன்றாவது ஆக ஒரு நபர் வந்து விளையாடி விட்டார் என்றும், அதனால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது என்றும் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.


 இந்த விஷயத்தில் சூரி  பாதிக்கப்பட்டது உண்மைதான், அதேபோல் என் அப்பாவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஆனால் நாங்கள் இருவரும் தற்போது பேசி இந்த விஷயத்தை முடித்து விட்டோம் என்றும் விரைவில் இது குறித்து செய்தியாளர்களுக்கு தெரிவிப்போம் என்றும் தெரிவித்தார்.  

நாம் வாழ்வது ஒரு சின்ன வாழ்க்கை அதில் ஏன் வெறுப்புணர்ச்சியுடன் வாழ வேண்டும், அதனால் நண்பர்களுக்குள் பிரச்சனை வேண்டாம் என்று முடிவு செய்து எங்களுக்குள் ஒற்றுமையாகி விட்டோம் என்றும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement