கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்வில் ஏற்பட்ட துயரமான சம்பவம், தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், நிகழ்வை காண வந்த அப்பாவி பொதுமக்கள் சிலர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கட்சியினரின் மனச்சோர்வை பரிசீலித்து, விஜய் அவர்களிடம் நேரடியாக வாட்ஸ்அப் அழைப்புகள் (WhatsApp Calls) மூலமாக பேசியுள்ளார். கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் நடைபெற்ற இந்த உரையாடலில், விஜய் ஆறுதல் கூறியதோடு எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய ஆலோசனைகளை பகிர்ந்துள்ளார்.
கரூர் நிகழ்வின் தாக்கத்தில் மன அழுத்தத்துடன் இருந்த தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பேசும் போது, “இந்த நிகழ்வால் மனம் உடைய வேண்டாம். இது போல ஒரு சூழ்நிலை ஏற்படும் என்று நாமும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்போது, நாம் நம்மை மீட்டெடுத்து செயல்படவேண்டும். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். புதிய வேகத்துடன் செயல்படுங்கள் எனவும்.. துயரத்தில் இருந்து வெளிவர வேண்டிய முயற்சிகளை செய்யுங்கள்..." எனவும் கூறியுள்ளார்.
கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். இது குறித்து விஜய், “இறந்தவர்களின் குடும்பங்களை நான் விரைவில் நேரில் சந்திக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்.” எனவும் தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Listen News!