"கலக்கப்போவது யாரு.?" நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த பாலா, இன்று ஒரு நகைச்சுவை கலைஞன் மட்டுமல்லாமல், நல்ல உள்ளம் கொண்ட சமூக சேவையாளராகவும் திகழ்கிறார். சமூக வலைத்தளங்களில், இவரது உதவிகள் பேசப்படும் நேரத்தில், இவரது சேவைகளை பற்றியும், அவரை விமர்சிக்கும் சிலருக்கான பதில்களையும் நடிகர் பிளாக் பாண்டி சமீபத்திய நேர்காணலில் மிகவும் நேர்மையாக தெரிவித்துள்ளார்.
இன்றைய சூழலில் ஒருவர் சமூகத்திற்காக செயல்பட்டாலும், அதை வரவேற்கும் மக்கள் சிலரே; ஆனால் விமர்சிக்க மட்டும் ஆயிரம் பேர் இருப்பார்கள். இந்நிலையில், பாண்டியின் உரை பாலாவுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் ஊக்கமும், விழிப்புணர்வும் அளிக்கிறது.
அண்மையில் பேசிய நடிகர் பிளாக் பாண்டி, KPY பாலா குறித்து மனதளவில் பேசினார். “பாலா செய்யும் உதவிகளைப் பார்த்து, அதை விமர்சிக்கும் மக்கள் இருக்கிறார்கள். ஆயிரம் பேர் பேசுவார்கள், குறை சொல்வார்கள். ஆனால், அதற்கெல்லாம் பயப்பட வேண்டியதில்லை பாலா... நீ முன்னேறி போய்ட்டே இருக்கணும்” என்று அவர் கூறினார்.
மேலும், " பேசும் போது மற்றவங்கள இழிவுபடுத்தாமல் மட்டும் பேசிடு பாலா.. ரஜினி, விஜய், அஜித் மாதிரி பெரிய ஆளா வரணும் பாலா... உதவி செய்யடா.." என்றும் கூறியிருந்தார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!