• Mar 16 2025

விஜய் சின்ன பையன்! நான் ஏன் எழுந்து நிற்கணும்! இயக்குநர் பாலா அதிரடி

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் பாலா சமீபத்திய பேட்டியில் "விஜய்யை பாலாவிற்கு புடிக்காது, அவர் வந்தா நான் ஏன் எழும்பி நிற்கணும் அவர் சின்னபையன்" என்று கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இயக்குநர் பாலாவிடம் தொகுப்பாளர் விஜய்யை பாலாவிற்கு பிடிக்காது, அதனால் தான் பாலா வேண்டும் என்றே அப்படி அமர்ந்து இருந்தார் என்றும் பலவிதமான செய்திகள் வந்தது, அது உண்மையா? இல்லை தற்செயலாக நடந்ததா? என்று கேட்கிறார் . இதற்க்கு இயக்குநர் பாலா இவ்வாறு பதிலளித்தார்.


அவர் கூறுகையில் " பாலாவுக்கு விஜய்யை புடிக்காது என்று பலவாறு செய்தியாக்கப்பட்டது, அது என்னை அறியாமல் நடந்த விஷயம். அப்படியே இருந்தாலும், நான் ஏன் அவரை பார்த்து எழுந்திருக்க வேண்டும், விஜய் என்னை விட எத்தனையோ வயது சிறியவர். ஒரு வேளை நான் அன்று எழுந்து நிற்காமல் இருந்தது கவனக்குறைவால் நடந்து இருக்கலாமே தவிர, அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக கால் மீது கால் போட்டு கொண்டு நான் அமர்ந்திருக்கவில்லை" என்று கூறினார். 


மேலும் எனக்கு விஜய்யை ரொம்ப புடிக்கும். ஒருமுறை நானும் எனது குடும்பத்தினரும் ஒரு நிகழ்ச்சிக்கு போயிருந்தோம் அப்போது என் மகள் விஜயின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டார். அதை பார்த்த விஜய், என்னிடம் ஒரு செல்பி எடுத்துக் கொள்ளட்டுமா என்று அனுமதி கேட்டார். அப்படி ஒரு டிசிப்ளினான ஒருத்தரை நான் எப்படி அவமானப்படுத்துவேன்.


பல இடத்தில் பலவிதமான கருத்துக்கள் என்னை பற்றி சொல்லுறாங்க. நான் யார் என்று எனக்குத் தெரியும், அப்படி இருக்கும்போது இணையத்தில் பரவும் செய்திக்காகவும், விமர்சனத்திற்காகவும் நான் ஏன் பதில் சொல்லணும். பதில் சொல்லிக்கொண்டு இருந்தா என் வேலையை சரியா செய்ய முடியாது என்று ஓபனாக பேசியுள்ளார்.

Advertisement

Advertisement