கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் காணப்பட்டார்கள். தற்போது ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடைபெற்ற நிலையில் இறுதியாக 10 போட்டியாளர்களே எஞ்சி உள்ளனர்.
இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி டிக்கெட் டு பினாலே பெட்டியுடன் என்ட்ரி கொடுக்கின்றார். ஆனால் பிக்பாஸ் வீட்டிலுள்ள ஹவுஸ்மேட்ஸில் அன்ஷிதா காணப்பட இல்லை.
d_i_a
இதன்போது, பிக்பாஸ் பினாலே நோக்கிய பயணம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முழுமையாக உங்களுடைய உழைப்பை 100% போடுங்கள். இந்த டிக்கெட் யாருக்கு கிடைக்கிறதோ அவங்க நேரா பைனலுக்கு போகலாம் என்று விஜய் சேதுபதி சொல்கின்றார்.
மேலும் பிக் பாஸ் பைனலுக்கு யார் போறீங்க என்பதை பார்ப்பதற்கு நானும் ஆவலாக உள்ளேன் என விஜய் சேதுபதி சொல்லி உள்ளார்.
இதே வேளை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது முத்துக்குமரன், தீபக், சௌந்தர்யா, மஞ்சரி, ஜாக்குலின், ராயன், பவித்ரா, ராணவ், விஷால் மற்றும் அருண் ஆகியோர் மட்டுமே எஞ்சியுள்ளார்கள்.
Listen News!