நடிகர் விஜய் ஆண்டனி எப்போதும் வித்தியாசமான கதைகள், உணர்வுகளுடன் கலந்த சம்பவங்களை தேர்வு செய்வதில் தனி முத்திரை பதித்தவர். தற்போது அவர் நடிப்பில் அருண் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சக்தி திருமகன்’ திரைப்படம் இன்று (19 செப்டம்பர் 2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஒரு சாதாரண மனிதர் எப்படி சாம்ராஜ்யம் கட்டுகிறான்? எந்த பாதையில் செல்கிறான்? இறுதியில் அந்த சக்தியைத் தாங்க முடியாமல் எவ்வாறு சிக்கிக்கொள்கிறான் என்பதுதான் இக்கதையின் மையம்.
விஜய் ஆண்டனி ஒரு சாதாரண செகரட்ரி ஆபீஸ்-இல் வேலை பார்த்து வருகிறார். பத்து ரூபாய்க்கு டீ வாங்கிக் கொடுப்பது போன்ற நிலை. பின் அரசியல் சாணக்யன் ஒருவனிடம் விஜய் ஆண்டனி சிக்குகின்றார். அதன்போது அனைவரும் அவரைத் தாக்க அதிலிருந்து மீண்டு வருகின்றார் என்பதே மீதிக் கதையில் இடம்பெற்றுள்ளது.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி தனது சிக்னேச்சர் ஸ்டைலிலும், புதிய கோணங்களிலும் நடித்திருக்கின்றார். சில காட்சிகளில் லாஜிக் குறைவாக காணப்படுகின்றது. அத்துடன் இரண்டாம் பாதியில் விஜய் ஆண்டனி சூப்பராக நடித்துள்ளார்.
Listen News!