• Sep 19 2025

பிரபல பாடகர் ஸ்கூபா டைவிங் விபத்தில் உயிரிழப்பு...!சோகத்தில் ரசிகர்கள்....!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

அசாமைச் சேர்ந்த பிரபல பாடகர் ஜூபீன் கார்க் (வயது 52), சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் செய்தபோது திடீரென மூச்சுத் திணறலால் உயிரிழந்தார். இன்று நடைபெற்ற இந்த துயர சம்பவம் இசை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஜூபீன் கார்க், அசாம், பெங்காலி, இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் எண்ணற்ற நினைவில் நிலைத்த பாடல்களை வழங்கியுள்ளார். இசை ரசிகர்களின் மனங்களில் தனிச்சின்னம் பதித்த இவர், தனது குரலால் இந்திய இசை உலகில் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்.


சிங்கப்பூரில் நடைபெறும் வடகிழக்கு விழா (North East Festival)வில் கலந்து கொள்ள ஜூபீன் கார்க் சென்றிருந்தார். இந்நிலையில், ஸ்கூபா டைவிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு CPR கொடுக்கப்பட்டு, Singapore General Hospital மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு ICUவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி மதியம் 2.30 மணியளவில் அவர் உயிரிழந்தார் என விழா அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சோகம் தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது இரங்கலைத் தெரிவித்தார். "இன்று அசாம் தனது விருப்பமான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. இது செல்ல வேண்டிய வயது அல்ல," என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement