• Sep 19 2025

6 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனராக அர்ஜுன்...!'தீயவர் குலை நடுங்க' டீசர் வெளியீடு...!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மூன்றூதாண்டுகளாக முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் ரசிகர்களை கவர்ந்தவர் ஆக்சன் கிங் அர்ஜுன். 'ஜென்டில்மேன்', 'ஜெய் ஹிந்த்', 'முதல்வன்' போன்ற ஹிட் படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.


1992ஆம் ஆண்டு 'சேவகன்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அர்ஜுன், ‘ஏழுமலை’, ‘வேதம்’ உள்ளிட்ட 12 படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளுக்குப் பின், தற்போது அவர் மீண்டும் இயக்குனராக களமிறங்கியுள்ளார்.

அர்ஜுன் இயக்கும் புதிய திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’. இதில் அவரது மகள் ஐஸ்வர்யா மற்றும் நிரஞ்சன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், ஜிகே ரெட்டி, பிக் பாஸ் அபிராமி, ராம்குமார், லோகு, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தினேஷ் லக்ஷுமணன் எழுதி இயக்கியுள்ளார். G.R. Arts மற்றும் Sun Moon Universal Pictures இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு – சரவணன் அபிமன்யு.

தொடர்ந்து நிலுவையில் இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது டீசர் வெளியீடாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது. திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement