தமிழ் திரைப்பட உலகில் இன்று பரபரப்பாக பேசப்படும் முக்கிய செய்திகளில் முதலிடம் பிடித்துள்ளது ரஜினிகாந்தின் 173–வது திரைப்படம். ஏற்கனவே, இந்த படம் உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வாயிலாக உருவாகும் என்று அறிவிக்கப்பட்டதும், ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் ஒரே திட்டத்தில் இணைந்து செயற்படுவது தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வாகவே கருதப்படுகிறது. இந்த கூட்டணி தயாரிப்பு மட்டுமே என்றாலும், இருவரும் பல தசாப்தங்களாக ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்திருப்பதால், ‘ரஜினி 173’ ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டது.
ராஜ்கமல் பிலிம்ஸின் அதிகாரபூர்வ அறிவிப்பிற்குப் பிறகு இந்தப் படம் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தப் படத்தை இயக்குவது சுந்தர்.சி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்மையில் சுந்தர்.சி இந்த திட்டத்திலிருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் விலகிவிட்டார்.
சுந்தர்.சி விலகிய உடனே, தமிழ் சினிமா சூழ்நிலையில் தற்பொழுது மிகப்பெரிய தகவல் ஒன்று வெளியாகி, ரசிகர்களை அதிர வைத்துள்ளது. அதாவது, ரஜினிகாந்தின் 173-வது படத்தை நடிகர் தனுஷ் இயக்கப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த தகவல் வெளிவந்தவுடனேயே சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரணம், தனுஷ் இயக்குநராக அறிமுகமான “பவர் பாண்டி” படத்திலிருந்து அதிகளவான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
இதுவரை தனுஷ் எழுதி இயக்கிய படங்கள், மனித உணர்வுகளைச் சொல்லும் விதத்தில் உள்ளன. இந்நிலையில் தற்பொழுது வெளியான தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!