தமிழகத்தில் அரசியல் மற்றும் திரை உலகை அதிர வைத்த சம்பவம் ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. Chief Minister மு.க. ஸ்டாலின், நடிகர்கள் அஜித் குமார், லிவிங்ஸ்டன், அரவிந்த் சாமி, குஷ்பு மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்திருந்தன.

இந்த மிரட்டல் சாதாரண தகவல் அல்ல, தமிழ்நாடு DGP அலுவலகத்திற்கு நேரடியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட மிரட்டல் என்பதால், உடனடியாக பாதுகாப்பு துறையில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், பொலிஸ் மற்றும் நிபுணர்கள் தீவிர சோதனைகளை மேற்கொண்ட பிறகு, இந்த மிரட்டல் புரளி எனத் தெரியவந்துள்ளது.
மிரட்டல் வந்த உடனே, பொலிஸார் அதனை மிகக் கடுமையாக எடுத்துக்கொண்டனர், ஏனெனில் இதில் இலக்குகளாகத் தெரிவிக்கப்பட்டவர்கள் தமிழகத்தின் முக்கியமான நபர்களாவர். அத்துடன் சமீபகாலமாகவே பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!