• May 08 2025

அதர்வாவின் பிறந்தநாளுக்கு சப்பிறைஸ் செய்த படக்குழு..! டுவிட்டரில் வைரலான வீடியோ..

subiththira / 13 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகர் தான் அதர்வா முரளி. பாணா காத்தாடி, பரதேசி மற்றும் சண்டிவீரன் போன்ற படங்களில் தனது மென்மையான நடிப்பு மற்றும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களால் ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், மே 7 அன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் அதர்வாவுக்கு பல இடங்களில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

அதர்வா தற்போது பராசக்தி, DNA மற்றும் இதயம் முரளி போன்ற முக்கியமான திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் 'இதயம் முரளி' திரைப்படம், தற்போது மிகவும் ஹைப்பாக பேசப்பட்டு வரும் படமாக விளங்குகின்றது. 


‘இதயம் முரளி’ திரைப்படம் ஒரு உணர்ச்சி பூர்வமான குடும்ப நகைச்சுவை கலந்த காதல் கதை எனத் தெரிகிறது. இதில் அதர்வாவுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், ரக்சன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அந்தவகையில் அதர்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு 'இதயம் முரளி' படக்குழு, இன்று காலை ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில், அதர்வாவின் சுவாரஸ்யமான BTS ஷாட்கள், அவரது ஸ்டைலான அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் உணர்ச்சி பூர்வமான காதல் சீன்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது. இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement