• Jan 18 2025

லைகாவுடன் உறவை முறித்து கொண்ட ரஜினிகாந்த்? இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லையா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படத்தை லைகா நிறுவனம் கடந்த சில மாதங்களாக தயாரித்து வந்த நிலையில் இன்றுடன் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த படத்தினால் லைகா நிறுவனம் மீது ரஜினிக்கு சில அதிருப்திகள் இருந்ததால் இனி லைகா நிறுவனத்தின் படத்தில் அவர் நடிக்க மாட்டார் என்றும் இந்த படத்துடன் லைகா உடனான ஒட்டும் உறவும் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி லைகா நிறுவனம் நடத்தவில்லை என்றும் இதுவரை ரஜினியின் படங்கள் பெண்டிங் போட்டதே இல்லை என்ற நிலையில் ’வேட்டையன்’ படத்தை சில மாதங்கள் ஒத்திவைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் இருந்த ரஜினிகாந்த் நேரடியாகவே சுபாஷ்கரனிடம் பேசியதாகவும் அதன் பின்னர் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பானதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நான் ’வேட்டையன்’ படத்தோடு லைகா நிறுவனத்தின் உறவை முறித்துக் கொள்ள ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாகவும் எதிர்காலத்தில் லைகா தயாரிக்கும் படத்தில் அவர் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்தாலும் இன்னும் மற்ற நடிகர்களின் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து திட்டமிட்டபடி இந்த படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் ரிலீஸ் தேதியில் தாமதம் செய்ய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.


Advertisement

Advertisement