• Oct 04 2024

எஸ்கேக்கு துப்பாக்கிய கொடுத்து சதீஷை ஏமாற்றிய வெங்கட் பிரபு! GOATல நீக்கப்பட்ட காட்சி

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

இளையதளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் கோட். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் பாடல்களை இசை அமைத்திருந்தார். 

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம் உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியானது. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்களான பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, பிரேம்ஜி, மோகன், ஜோகி பாபு உள்ளிட்ட பலர்  நடித்துள்ளதோடு இந்த படத்தில் கேமியா ரோலில் சிவகார்த்திகேயனும் த்ரிஷாவும் கலக்கியிருப்பார்கள்.

விஜய் டபுள் ஆக்சனில் நடித்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் வசூல் ரீதியாக 413 கோடிகளை கடந்து சாதனை படைத்திருந்தது. தற்போது வரையில் திரையரங்குகளில் இந்த திரைப்படத்திற்கு ரசிகர் கூட்டம் அலைமோதிய வாறு உள்ளன.

மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கிளைமாக்ஸ்  காட்சியில் வில்லனை பார்த்துக் கொள்வதாகவும் அவரிடம் தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை நடிகர் விஜய் கொடுப்பதாகவும் காட்சி அமைந்தது. இதனால் கோலிவுட்டில் தன்னுடைய இடத்தை சிவகார்த்திகேயனுக்கு நடிகர் விஜய் கொடுத்ததாக விமர்சனங்கள் எழுந்தன.


இந்த நிலையில், கோட் படத்தில் நடிகர் சதீஷும் கேமியோ கேரக்டரில் நடித்திருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் நடிகர் சதிஷ் பேட்டியொன்றில் கூறியுள்ளார். 

அதன்படி அவர் கூறுகையில், கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கி கொடுத்துவிட்டு போனதற்கு பிறகு அந்த இடத்திற்கு தான் வருவதாகவும் சிவகார்த்திகேயனிடம் அப்ப நான் அவரிடத்தை பார்த்து கட்ட என்று கேட்பதாகவும் காட்சி அமைந்ததாகவும் ஆனால் அந்த காட்சியை எடிட்டிங்கில் தூக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை கேட்ட ரசிகர்கள்  சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கியை கொடுத்து சதீஷை ஏமாற்றி விட்டார்களே என கமெண்ட் பண்ணி வருவதோடு இதுபோன்ற எத்தனை காட்சிகளை வெங்கட் பிரபு  கட் பண்ணி தூக்கி உள்ளாரோ என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement