• Oct 12 2025

டிரெண்டிங் தீவிரவாதி கௌதம் மற்றும் பிரிகிடா நடிப்பில் வெளியான "திமிருக்காரியே" பாடல்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் இசைத் துறையில் சமீப காலங்களில் இன்டீ பாடல்கள் என்ற புதுவகை ஆல்பங்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றன. சொல்லப் போனால், இன்டீ பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்றும் கூறலாம். இந்தப் பட்டியலில்  இன்டீ பாடலாக இணைந்துள்ளது தான். 'திமிருக்காரியே பாடல்.


கோவில் திருவிழா பின்னணியில் இந்தப் பாடல் உருவாகி இருக்கிறது. முன்னணி இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் பாடலை சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டார். ஏ.கே. சசிதரன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை அந்தோனி தாசன் பாடியுள்ளார். பிரபல யூடியூபர்களான டிரெண்டிங் தீவிரவாதி கௌதம் மற்றும் பிரிகிடா இதில் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். 


இதுதவிர ஸ்ரீதர் மாஸ்டரின் அசத்தல் நடன அசைவுகள் பாடலுக்கு கூடுதல் உற்சாகம் மற்றும் எனர்ஜியை சேர்த்துள்ளது. இந்தப் பாடல் யூடியூப் மற்றும் முன்னணி இசை தளங்களில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.இதோ அந்த பாடல். 



Advertisement

Advertisement