இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் தான் வணங்கான். இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரோடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி, ராதா ரவி, ரித்தா, மிஸ்கின், ராதாரவி, ஜான் விஜய், ரவிமரியா, சிங்கம் புலி உட்பட ஏராளமானவர்கள் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தை சமீபத்தில் குடும்பத்துடன் பார்த்த அருண் விஜய் மிகவும் உருக்கமாக இயக்குனர் பாலாவுக்கு நன்றி கூறியிருந்தார். இந்த படத்தில் இருந்து வெளியான டீசர், டெய்லர், போஸ்டர்கள் என்பவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்த நிலையில், வணங்கான் படத்தில் இருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக எதிர்வரும் ஜனவரி 10-ம் திகதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் மூலம் இயக்குனர் பாலா தரமான கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கின்றார். அத்துடன் அஜித்தின் விடாமுயற்சி படமும் பொங்கல் தினத்தை ஒட்டி ரிலீஸ் ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!