• Jan 20 2025

அடிக்கிற வெயிலுக்கு திடீரென மொட்டை அடித்த உர்ஃபி ஜாவேத்! அவரே வெளியிட்ட போட்டோ

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

இந்தியில் இடம் பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் உர்ஃபி ஜாவேத். இவர் கவர்ச்சி உடைகளை அணிந்து ரசிகர்களை குஷிப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அளவுக்கு மீறி கவர்ச்சிக் காட்டுவதால் சர்ச்சையிலும் அவ்வப்போது சிக்கிக் கொள்வார்.  

இவர் அணியும் ஆடைகளை பார்ப்பதற்கு என்றே சமூக வலைத்தளங்களில் இவருக்கென ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர் என்றே கூறலாம். புதிது புதிதாக தன்னை அலங்கரிப்பதில் கை தேர்ந்தவராக காணப்படுகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அவர் ஆடைக்கு பதிலாக f பேனை தனது மேலாடையில் சுற்ற வைத்து வித்தியாசமாக ஆடை அணிந்து இருந்தார். இந்த காட்சிகள் ரசிகர்களை நிலைகுலைய வைத்திருந்தது. இதை தொடர்ந்து அங்கங்கே கிழித்து போட்ட ஏதோ ஒரு வடிவிலான ஆடையை உடுத்தி இருந்தார் உர்ஃபி ஜாவேத். அதனை பார்த்த ரசிகர்களும் குழம்பிப் போய் இருந்தனர்.


இந்த நிலையில், தற்போது பிரபல நடிகையாக காணப்படும்  உர்ஃபி ஜாவேத் திடீரென மொட்டை அடித்துள்ளார். குறித்த புகைப்படத்தை அவர் வெளியிட்டு உள்ளதோடு, ரசிகர்கள் இது உண்மையா? பொய்யா? என குழம்பி வருகிறார்கள்.


Advertisement

Advertisement