• Jan 19 2025

கழண்டு விழுந்த சேலை.. தூக்கி சொருகிக் கொண்டே சென்ற ஊர்பி ஜாவேத்! வீடியோ வைரல்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் ஓடிடி புகழான நடிகை ஊர்பி ஜாவேத், இணையதளத்தில் எப்போதுமே ட்ரெண்டிங்காக காணப்படுகின்றார். அதற்கு காரணம் இவர் விதவிதமாக வித்தியாசமாக அணிந்து வரும் ஆடைகள் தான்.

இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல சர்ச்சையான விஷயங்களை செய்து வருவதோடு அதனை வீடியோவாக வெளியிட்டு இணையத்தில் பேசு பொருளாக்குவார். ஆனாலும் இவருக்கு என்று ரசிகர் பட்டாளம் காணப்படுகிறது.

1997ம் ஆண்டு லக்னோவில் பிறந்தவர் ஊர்பி,  தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்கேயே முடித்தார். அதன் பின்பு மாடலிங் சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். தான் ட்ரெண்டிங்கில் இருப்பதற்காக உடைகளில் வித்தியாசம் காட்டி வருகின்றார்.


இதனால் தனது கையில் கிடைக்கும் பொருட்களினால் உடை தயாரித்து அதனை சோசியல் மீடியாவில் வெளியிடுவார். இவரின் ஆடைகளை டிசைன் பண்ணுவதற்கு என்றே ஒரு குழு இவருக்காக செயல்படுகின்றது.

சமூக வலைத்தளங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றார்கள். பலர் இவரது செயற்பாடு பைத்தியக்காரத்தனமாக இருப்பது என்று பேசினாலும் ஒரு சிலர் உங்களுடைய முயற்சிக்கு நிச்சயம் சிறந்த பலன் கிடைக்கும் என்று பாராட்டியும் வருகின்றார்கள்.

இந்த நிலையில், தற்போது ஊர்பி ஜாவேத்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் செல்லும் போது அவர் கட்டி இருந்த சாரி வழுகி விழுவதோடு அவர் சாரியை கட்டி உள்ள விதமே வித்தியாசமாக காணப்படுகின்றது. தற்போது இதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement