• Oct 18 2024

'சிறகடிக்க ஆசை’ சீரியலில் ‘உப்பு புளி காரம்’.. ஹாட்ஸ்டார் நிர்வாகியின் பலே ஐடியா..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

ஒரு சீரியல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானால் அந்த சீரியலில் புதிதாக தொடங்கிய சீரியலில் உள்ள கேரக்டரை இணைத்து வைப்பது என்பது கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சி நிர்வாகத்தினர் கடைபிடிக்கும் புத்திசாலித்தனமான ஐடியாவாக உள்ளது.

ஏற்கனவே இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ள நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் சமீபத்தில் தொடங்கப்பட்ட ’உப்பு புளி காரம்’ என்ற வெப்தொடரின் கேரக்டர்கள் இணைக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் மே 30ஆம் தேதி ’உப்பு புளி காரம்’ வெப்தொடர் தொடங்கப்பட்டது என்பதும் முதல் வாரம் 4 எபிசோடுகள் அதன் பின் இரண்டாவது வாரம் நான்கு எபிசோடுகள் என மொத்தம் எட்டு எபிசோடுகள் இதுவரை வெளியாகியுள்ளன.



பொன்வண்ணன் - வனிதா தம்பதிகளுக்கு நான்கு குழந்தைகள் என்ற நிலையில் 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் வழக்கறிஞர், இரண்டாவது மகள் ஜிம் டிரைனர் மற்றும் மூன்றாவது மகள் படித்து வேலை தேடும் கேரக்டர் என்ற நிலையில் ஒரே மகன் ஐஏஎஸ் தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறார். இந்த குடும்பத்தில் உள்ள கலகலப்பான காட்சிகள் மற்றும் ரொமான்ஸ், சென்டிமென்ட் காட்சிகளுடன் ’உப்பு புளி காரம்’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் தான் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இன்றைய 'சிறகடிக்க ஆசை’ எபிசோடில் ’உப்பு புளி காரம்’ கேரக்டர்களான பொன்வண்ணன் மற்றும் வனிதா கேரக்டர்கள் வருகின்றன. நாயகன் முத்து மற்றும் அவரது நண்பர் செல்வம், பொன்வண்ணன் - வனிதா நடத்தும் ஹோட்டலுக்கு வருவது போன்றும் அதில் அவர்கள் சாப்பாட்டை புகழ்ந்து பேசுவது போன்றும் முத்துவுக்கு பொன்வண்ணன் வனிதா தம்பதிகள் நன்றி தெரிவிப்பது போன்ற காட்சிகள் உள்ளன.

மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி உள்ள ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் ’உப்பு புளி காரம்’ கேரக்டரை இணைக்கும் வகையில் ஐடியா கொடுத்ததே ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் முன்னணி நிர்வாகி என்றும் அவருடைய பலே ஐடியா செம்மையாக ஒர்க் அவுட் ஆகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement