• Jan 19 2025

ரீரிலீசில் படுதோல்வி அடைந்த ‘இந்தியன்’.. ‘கில்லி’ வசூலில் 10ல் ஒரு பங்குதான்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன்’ படம் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படம் சமீபத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்டது. ’இந்தியன் 2’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த மாதம் ’இந்தியன்’ படத்தை ரிலீஸ் செய்தால் பார்வையாளர்களுக்கு கோர்வையாக கதை புரியும் என்பதால் இந்த படம் ரீரிலீஸ் செய்யப்பட்டது.

ஆனால் ’இந்தியன்’ படத்தை பார்த்த பலர் படத்தின் பிரிண்ட் சரியில்லை என்றும் பல இடங்களில் மங்கலாக இருக்கிறது என்றும் சவுண்ட் சிஸ்டமும் சரி செய்யப்படவில்லை என்றும் அதிருப்தி அடைந்துள்ளனர். அது மட்டும் இன்றி ’கில்லி’ படத்தின் முதல் நாள் வசூலில் 10ல் ஒரு பங்கு வசூல் கூட இந்தியன் படம் முதல் நாளில் வசூல் செய்யவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளன.



விஜய், த்ரிஷா நடித்தது ’கில்லி’ திரைப்படம் ரீரிலீஸ் ஆகி முதல் நாளில் 10 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் ’இந்தியன்’ படம் ஒரு கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதிகபட்சம் இந்த படம் மொத்தம் மூன்று கோடி மட்டுமே வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ’கில்லி’ திரைப்படம் ரீரிலீஸ் 50 நாட்களைக் கடந்து 30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என்பதும் இன்னும் சில திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டு கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ’இந்தியன் 2’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடலுக்கும் பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது. எனவே ’இந்தியன்’ படம் அளவுக்கு 'இந்தியன் 2’  படம் வசூல் செய்யுமா, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement