• Jul 27 2024

'வேட்டையன்' டிஜிட்டல் உரிமத்தை அடித்துபிடித்து பெரும் தொகைக்கு வாங்கிய நிறுவனம் எது தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டார் ஆக பயணித்து வருபவர் தான் ரஜினிகாந்த். ஹாலிவுட் உலகில் 45 ஆண்டுகளை கடந்து வெற்றி நாயகனாக வலம் வரும் இவர், தற்போதும்  பல படங்களை தன் வசம் வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது. ஆனாலும் அதை அடுத்து அவருடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படம் தோல்வியை தழுவியது.

இதைத்தொடர்ந்து பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்திலும் நடிப்பதற்கு கமிட் ஆகி உள்ளார்.


வேட்டையன் படத்தில் நடித்து முடித்த ரஜினிகாந்த், இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்று இருந்தார். நேற்றைய தினம் நடந்த பிரதமரின் பதவி ஏற்பு விழாவிலும் பங்கேற்றார்.

இந்த நிலையில், வேட்டையன் திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் மாதம் பத்தாம் தேதி வெளியாக உள்ளது. அதன் சாட்டிலைட் உரிமத்தை பிரபல சன் நிறுவனம் பெற்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழ் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அமேசன் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement