• Jan 19 2025

காவல்துறையில் சேர்கிறாரா சன்னி லியோன்? தேர்வு எழுத ஹால் டிக்கெட் அனுப்பிய அரசு அதிகாரிகள்..

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை சன்னி லியோனுக்கு உத்தரப்பிரதேச மாநில அரசு காவல் துறையில் தேர்வு எழுத ஹால் டிக்கெட் அனுப்பி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை சன்னி லியோன் இந்தியாவுக்கு வந்து ஹிந்தி திரைப்படங்களில் கிளாமர் கேரக்டர்களில் நடித்தார் என்பதும் அவர் தற்போதும் பாலிவுட் திரையுலகில் பிஸியான ஒரு நடிகையாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழிலும் ஒரு சில படங்கள் நடித்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அவருக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் பலர் அறிந்தது.



இந்த நிலையில் திடீரென சன்னிலியோனுக்கு உத்தரபிரதேசம் மாநில அரசு காவல்துறை தேர்வு எழுத ஹால் டிக்கெட் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சன்னி லியோன் புகைப்படத்தடன் கூடிய ஹால் டிக்கெட் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து விசாரணை செய்தபோதுதான் சன்னிலியோன் பெயரில் போலியாக மர்ம நபர் ஒருவர் காவல்துறை தேர்வு எழுத விண்ணப்பம் செய்துள்ளதாகவும் அதை அரசு அதிகாரிகள் சரிபார்க்காமல் அந்த விண்ணப்பத்தை ஏற்று, தேர்வு எழுத ஹால் டிக்கெட் அனுப்பி உள்ளதாகவும் தெரிய வந்தது.

இதனை அடுத்து உத்தரப் பிரதேசம் மாநில சைபர் கிரைம் காவல் துறையினர் தற்போது சன்னி லியோன் பெயரில் போலியாக காவல்துறை தேர்வு எழுத விண்ணப்பம் செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர். இன்னும் ஒரு சில நாட்களில் அந்த நபரை பிடித்து விடுவோம் என்றும் போலியாக விண்ணப்பம் செய்து அவருக்கு தகுந்த தண்டனை பெற்று தருவோம் என்றும் உத்தரபிரதேசம் மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement