• Jun 26 2024

இப்படி கை விட்டுட்டீங்களே.. உமாபதி - ஐஸ்வர்யா வரவேற்பு தினத்தில் ஒரு மிகப்பெரிய தோல்வி..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

ஆக்சன் கிங் அர்ஜுன் மகள் மற்றும் காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி திருமணம் கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில் 14 ஆம் தேதி வரவேற்பு நடைபெற்றது என்பது தெரிந்தது. ஆனால் அதே 14ஆம் தேதி உமாபதிக்கு ஒரு மிகப்பெரிய தோல்வி கிடைத்த நிலையில் அதை அவர் கண்டுகொள்ளாமல் விட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் ஒரு சில படங்கள் நடித்த உமாபதிக்கு வெற்றி படம் என்று எதுவும் இல்லாத நிலையில் தான், அவர் அர்ஜுன் நடத்திய சர்வைவல் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா மற்றும் உமாபதி ஒரு திரைப்படத்தில் நடித்த போதுதான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு அதன் பின் இரு வீட்டார் சம்பந்தத்துடன் ஜூன் 10ஆம் தேதி சிறப்பாக திருமணம் நடந்தது. ஜூன் 14ஆம் தேதி வரவேற்பு நடந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உட்பட பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை உலக பிரபலங்களும் இந்த வரவேற்பில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் உமாபதி  -ஐஸ்வர்யா வரவேற்பு நடந்த அதே தினம் தான் உமாபதி நடித்த 'பித்தல மாத்தி’ என்ற திரைப்படம் வெளியானது. பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகும் போது ப்ரமோஷன் மிகவும் முக்கியம் என்பதும் குறிப்பாக சின்ன பட்ஜெட் படம் வெளியாகும் போது நிச்சயம் பிரமாண்டமாக ப்ரமோஷன் செய்தால்தான் அப்படி ஒரு படம் வெளியாவது ரசிகர்களுக்கு தெரிய வரும்.



ஆனால் உமாபதி மற்றும் அவருடைய தந்தை தம்பி ராமையா ஆகிய இருவரும் நடித்த 'பித்தல மாத்தி’ திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இருவரும் ப்ரமோஷனுக்கு வரவில்லை என்றும் கல்யாண பிசியில் அவர்கள் அந்த படத்தையே மறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக 'பித்தல மாத்தி’ என்ற திரைப்படம் வெளியானதே பலருக்கு தெரியவில்லை என்றும் இதனால் தியேட்டரில் 20 பேர், 30 பேர் மட்டுமே முதல் நாள் காட்சியில் இருந்தார்கள் என்பதும் பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

உமாபதி, தம்பி ராமையா உள்பட ஒருவருக்கும் நான் ஒரு பைசா கூட சம்பளம் பாக்கி வைக்கவில்லை , ஆனால் படத்தின் ப்ரமோஷனுக்கு அவர்கள் இருவரும் வரவில்லை, கல்யாண பிசியில் இருந்தாலும் குறைந்தபட்சம் ஒரு வீடியோவாக சமூக வலைதளத்தில் அவர்கள் வெளியிட்டு இருக்கலாம், அதைக்கூட செய்யவில்லை என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் புலம்பியுள்ளார்.

'பித்தல மாத்தி’ ரிலீஸான அதே தினத்தில் வெளியான ’மகாராஜா’ திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி விழுந்து விழுந்து ப்ரமோஷன் செய்தார் என்றும் தியேட்டரில் நேரில் சென்று ரசிகர்களை சந்திப்பது, சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவு செய்வது, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சியில் ஒரு நாள் முழுவதும் கலந்து கொண்டு ப்ரமோஷன் செய்வது ஆகியவை செய்த நிலையில் சின்ன நடிகர் ஆன உமாபதி தன்னுடைய படம் வெளியாகும் போது கண்டுகொள்ளாமல் இருப்பது திரையுலகினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement