• Jan 19 2025

சென்னையில் செந்தில் - மீனா ரொமான்ஸ்.. ஓவராக போகும் தங்கமயில்.. கடுப்பாகிய கோமதி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பது குறித்து ராஜி கூற, ராஜியின் பெருமைகளை பழனி மாமா குழந்தைகளின் பெற்றோரிடம் கூறுகிறார். ஒரு வழியாக டியூஷன் ஸ்டார்ட் ஆகிய நிலையில் ’மாமாவிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு ஆரம்பிக்கலாமே’ என்று தங்கமயில் கூற, ‘மாமாவிடம் நான் பேசிக் கொள்கிறேன்’ என்று ராஜி கூறுகிறார்.

இதனை அடுத்து சென்னை சென்ற செந்தில் மற்றும் மீனா ட்ரைனிங் செல்ல தயாராகி வரும் நிலையில் செந்தில் ரொமான்ஸ் பண்ணுகிறார். அதை மீனா ரசித்துக்கொண்டிருக்கும் நிலையில் திடீரென பாண்டியன் போன் செய்து சில வேலைகளை கொடுக்க செந்தில் அப்செட் ஆகிறார். அப்போது மீனா ’இது எதிர்பார்த்ததுதான், நான் ட்ரைனிங் போய் வருகிறேன், நீங்கள் உங்கள் வேலையை முடிங்க, ஈவினிங் நாம் இரண்டு பேரும் சேர்ந்து எங்கேயாவது செல்லலாம். என்று சொல்ல செந்தில் அதிருப்தியுடன் கிளம்புகிறார்.

இந்த நிலையில் ராஜி மற்றும் அரசி மொபைலில் வீடியோ பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் நிலையில் கோமதி அங்கு வந்து ராஜியை கண்டிக்கிறார். அரசியை கண்டிப்பதை விட்டு விட்டு அவளுடன் சேர்ந்து நீயும் சிரிக்கிறாய் என்று கூற அப்போது தங்கமயில் சாப்பாடு கேரியரை கொண்டு வருகிறார். சரவணனுக்கு மட்டும் தான் சாப்பாடு எடுத்து செல்கிறார் என்று பார்த்தால் பாண்டியனுக்கும் அவர் கடையில் உள்ள பழனி மாமா, தாத்தாவுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து செல்கிறேன்’ என்று தங்கமயில் கூற கோமதி அப்செட் ஆகிறார்.



’இந்த வீட்டில் அப்படியெல்லாம் பழக்கம் இல்லை’ என்று கோமதி கூற, ’பழகிக்கலாம் வேலை செய்கிறவருக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுப்பதுதான் நல்லது’ என்று கூற ’நீ உன் புருஷனுக்கு மட்டும் சாப்பாடு கொடுக்க வேண்டியது தானே, எதற்கு எல்லோருக்கும் கொடுக்கிறாய் என்று கோமதி கேட்க ’பரவாயில்லை இருக்கட்டும்’ என்று ஆட்டோ பிடித்துக் கொண்டு சாப்பாடு எடுத்து செல்கிறார் தங்கமயில்.

கடைக்கு சென்று சாப்பாடு கொடுக்கும் போது பாண்டியன் ’எதற்காக நீ இங்கே வெயிலில் அலைகிறாய் என்று கேட்க, பரவாயில்லை நீங்கள் எல்லோரும் வீட்டுக்கு வந்து சாப்பிடுவதற்கு நான் ஒருத்தி மட்டும் அலைவது தவறு இல்லை’ என்று கூற பாண்டியன் பெருமிதம் அடைகிறார்.

அதன் பிறகு வாழை இலை விரித்து தாத்தா மற்றும் பழனி மாமாவுக்கு சாப்பாடு கொடுக்கிறார் தங்கமயில். அந்த நேரத்தில் கடைக்கு ஒரு கஸ்டமர் வர அந்த கஸ்டமரையும் கவர்ந்து அவரிடம் தங்கமயில் வியாபாரம் பார்த்து என்னுடைய முதல் வியாபாரம் என்று அந்த பணத்தை கண்களில் ஒத்திக்கொண்டு கொடுப்பதை பாண்டியன் ரசித்து பார்க்கிறார்.

மொத்தத்தில் இன்றைய எபிசோடில் தங்கமயில் கொஞ்சம் ஓவராக பில்டப் செய்வதை பாண்டியன் ரசித்தாலும் கோமதி கடுப்பாகி உள்ளார். இனி அடுத்தடுத்த எபிசோடுகளில் என்ன நடக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement