• Dec 06 2024

TVK விஜய் அதிரடி! பதற்றத்தில் உதயநிதி! அவ்வளோதான் முடிச்சுவிடீங்க போங்க....

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாடு நடந்தது.. அந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜக சித்தாந்த எதிரி என்றும் திமுக அரசியல் எதிரி என்றும் சூசகமாக குறிப்பிட்டார். பாசிசம் பற்றி விஜய் பேசியதை வைத்து மற்ற கட்சி தலைவர்கள் சர்ச்சையை கிளப்பினார்கள்.


ஆனால் பாசிசம் தொடர்பாக விஜய் பேசியதில், மக்களுக்கு எதுவும் தவறாக தெரியவில்லை என்பது தான் உண்மை. இந்த நிலையில், தொல். திருமாவளவனுக்கு, சீமானுக்கும் தான் போட்டியே. மாநாடு நடந்து முடிந்ததிலிருந்து தொண்டை தண்ணீர் வற்ற கூப்பாடு போடுகிறார்கள். இப்படி இருக்க, அடுத்ததாக விஜய் வரும் டிசம்பர் மாதம் முதல் மண்டலவாரியாக விசிட் அடிக்கவுள்ளார்.


இதற்க்கு நடுவில், திருமாவளவனும், விஜயும் ஒரே மேடையில் ஒரு நிகழ்ச்சியில் வேறு கலந்து கொள்ள போகின்றனர் என அரசியல் அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.  மறுபக்கம் திமுக விஜய் அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மாநாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் இருந்து எவ்வளவு பேர் கலந்து கொண்டனர் என்று உளவுத்துறை மூலமாக தகவல் எடுத்தனர். 

d_i_a


மேலும் தேர்தல் களம், விஜய் vs உதய் என்று மாறும் நாட்கள் தூரத்தில் இல்லை. இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிக்காக வருகிற 5 மற்றும் 6 ம் தேதி விழுப்புரம் மாவட்டம் செல்ல உள்ளார். இதுகுறித்து திமுக ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது.  உதயநிதி வருகையின்போது ஆயிரக்கணக்கானோர் இணைந்து பிரமாண்ட வரவேற்பு கொடுக்க வேண்டும். அதற்காக தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இங்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளதாம் இதனால் நெட்டிசன்கள் இது எல்லாம் உங்களுக்கு தேவையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 



Advertisement

Advertisement