• Jan 18 2025

பிரதர் படத்தால் ஜெயம் ரவி தலையில் விழுந்த சுமை.. சும்மா 4 கோடி செலவாம்.. பாவம்யா மனுஷன்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தீபாவளி தினத்தன்று சிவகார்த்திகேயன் நடித்த அமரன், கவின் நடித்த பிளடி பெக்கர் மற்றும் ஜெயம் ரவி நடித்த பிரதர் படங்கள்வெளியானது. இந்த படங்களில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்த நிலையில், பிரதர் படத்தினால் ஜெயம் ரவிக்கு சுமார் 4 கோடி ரூபாய் வரை வீண் செலவு ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.

ஜெயம் ரவி நடித்த பிரதர் படத்தை சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய எம். ராஜேஷ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பூமிகா, நட்டி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள்.

d_i_a

காதலுடன் காமெடி கலந்த படமாக பிரதர் படம் வெளியாகி இருந்தது. ஆனாலும் இந்த படத்தில் திறமையான நடிகர்கள் இருந்த போதும் அவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது. தீபாவளி ரேசில் அடிவாங்கிய படம் என்றால் அது பிரதர் படமாக தான் காணப்படுகின்றது.


அதன்படி வலைப்பேச்சு அந்தணன் கூறுகையில், பிரதர் படத்தின் மூலம் ஜெயம் ரவிக்கு 4 கோடி ரூபாய் வீண் செலவு ஏற்பட்டுள்ளது.. மேலும் பிரதர் படத்தில் வட இந்திய ரிலீஸ்களை வாங்கிய விநியோகஸ்தர் இறுதியாக படத்தினை வேண்டாம் என்று கூறியதாகவும் அவர் ஏற்கனவே செலுத்திய 21 கோடிகளை திரும்பவும் கேட்டுள்ளார்.

இதன் காரணத்தினால் படத்தின் தயாரிப்பாளர் கடைசி நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தன்னால் முடிந்த அளவிற்கு பணத்தை புரட்ட , ஜெயம் ரவி தனது சொந்த பணத்தில் இருந்து நான்கு கோடி ரூபாய் வரை அவருக்கு கொடுத்து பிரச்சனையை முடித்துள்ளார். அதனால் தான் படம் வெளியானது எனவும் அந்தணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement