பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மயில் தன்ர அம்மா கிட்ட என்னோட கல்யாணத்துக்கு வாங்கின பணத்தை நீ இன்னும் அடைக்கலயா என்று கேட்கிறார். அதுக்கு மயிலோட அம்மா வருமானம் என்ற ஒன்னு இருந்தால் தானே இதையெல்லாம் செய்ய முடியும் நமக்குத் தான் அதுக்கு வழியில்லையே என்கிறார். மேலும் தன்னட இப்போதைக்கு எந்த பணமும் இல்ல என்று சொல்லி அழுகிறார்.
அதனை அடுத்து ராஜி கதிருக்காக ட்ராவெல்ஸிற்கு சாப்பாடு கொண்டு போறார். அதைப் பார்த்த கதிர் எனக்கு இதெல்லாம் வேணாம் என்கிறார். பின் ராஜி ட்ராவெல்ஸ் குப்பையா இருக்கிறதைப் பார்த்து கூட்டிக்கொண்டு இருக்கிறார். அதை கதிர் பார்த்து ரசிச்சுக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து, மீனாவோட அப்பா Office -க்குப் போய் மீனாகூட கதைச்சுக் கொண்டிருக்கிறார்.
பின் மீனாவோட அப்பா அரசாங்கம் கொடுக்கிற இடத்தில போய் மீனாவை தனியா இருக்கச் சொல்லுறார். அதைக் கேட்ட மீனா நான் அப்புடி எல்லாம் போக மாட்டேன் என்கிறார். மேலும் இதை எல்லாம் நான் பார்த்துக் கொள்ளுறேன் என்று சொல்லி தன்ர அப்பாவ அங்கிருந்து போக சொல்லுறார். பின் மீனா செந்திலுக்கு போன் எடுத்து தனியா இருக்கிறத பற்றி அப்பா கிட்ட எதுவும் சொன்னீங்களா என்று பேசுறார்.
அதனை அடுத்து ரோட்டில அரசி சரவணன் கூட பேசுறதை பார்த்து கதிர் கோபப்படுறார். மறுபக்கம் பாண்டியன் கடையில அவசர அவசரமா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்ப மயிலோட அப்பா வேலை எதுவும் செய்யாமல் கதைச்சுக் கொண்டிருக்கிறார். அதால பாண்டியன் வேலை செய்யுறார். அதைப் பார்த்த சரவணன் ஏன் மயிலோட அப்பா வேலை செய்யல என்று சொல்லிப் பேசுறார். பின் மயிலோட அப்பா கடையில யாரும் இல்லாத நேரம் பார்த்து அங்கிருந்த பணத்தை எடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!