சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து வேற ஒராள் மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு விஜயா கிட்ட போய் காசு கேட்க அவர் அடிக்கிறார். அதைப் பார்த்த மீனா அழுது கொண்டே போனில வீடியோ எடுக்கிறார். இதனை அடுத்து இன்னொரு பொம்பிள விஜயா கிட்ட வந்து கொஞ்சம் பண உதவி பண்ணுங்க என்று கேட்க விஜயா அதுக்கு பேசுறார். அதையும் முத்து வீடியோ எடுக்கிறார்.
பின் முத்து எங்க அம்மா இதுக்கப்புறம் டாக்டர் இல்ல கம்பவுண்டர் கூட ஆக முடியாது என்கிறார். அதனை அடுத்து, விஜயா பார்வதி வீட்ட போய் டாக்டர் பட்டம் கொடுக்கிறவங்களிட்ட தினமும் அன்னதானம் கொடுக்கிறனான் இப்பவும் அந்த வேலையை முடிச்சிட்டு தான் வாறன் என்று சொல்லுறார். அதைக் கேட்டு அந்தப் பொம்பிள விஜயாவைப் பாராட்டுறார்.
இதனை அடுத்து அவங்க டாக்டர் பட்டத்திற்கான டாகுமெண்ட்ஸ் எல்லாத்தையும் விஜயா கிட்ட கொடுக்கிறாங்க. அதைப் பார்த்த விஜயா சந்தோசப்படுறார். அந்த நேரம் பார்த்து முத்து அங்க போய் எல்லா உண்மையையும் வீடியோவாக காட்டுறார். அதைப் பார்த்து டாக்டர் பட்டத்திற்கு சிபாரிசு பண்ணுறவங்க கோப்படுறார்.
அதனைத் தொடர்ந்து விஜயா, தான் என்ன பண்ணாலும் இந்த வீட்டில இருக்கிறவங்களுக்கு பொறுக்காது என்று கோபமாக சொல்லுறார். அதைக் கேட்ட அண்ணாமலை நீ நல்லவளா நடிக்கிறதை விட உண்மையிலேயே நல்லது செய் என்கிறார். இதைத் தொடர்ந்து மனோஜ் ராணி வீட்டிற்கு மல்லிகைப் பூவோட போய் நிற்கிறார். அதைப் பார்த்த ராணி கத்தி ஆட்களை கூப்பிடுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!