பிரபல நடிகை திர்ஷா தற்போது ரொம்ப பிசியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்ட்ராகிரேமில் அழகிய சேலையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.
நடிகை திர்ஷா எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் இவர் தற்போது அழகிய பச்சை மற்றும் ஊதா நிறம் கலந்த சாரியை கட்டி கலாச்சாரமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் தேவதை மாதிரி இருக்கீங்க, சூப்பர், சாரியில் அழகாக இருக்கீங்க என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.
தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற திரைப்படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படங்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!