இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நாளை திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் விடுதலை-2. இதன் ப்ரோமோஷன் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில் தற்போது சிறப்பு காட்ச்சிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் சூரி, நடிகர் விஜய் சேதுபதி, நடிகை மஞ்சுவாரியர் நடித்த விடுதலை-2 திரைப்படத்தின் மீது ரசிகர்களிடத்தே அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இதுவரையில் வெற்றிமாறன் கொடுத்த வெற்றி படங்களின் லிஸ்ட்டில் தற்போது விடுதலை பாகம் 1ம் இணைந்து விட்டது. இதனால் பாகம் இரண்டு எப்படி இருக்க போகிறது என ரசிகர்கள் அவளாக காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் "விடுதலை-2 திரைப்படத்தின் சிறப்புக்காட்சிக்கு திரையரங்குகளில் நாளை தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை ஒருநாள் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை மொத்தமாக 5 காட்சிகளை திரையிட அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!