சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ் வீடு வாங்குவதற்காக லோன் கேட்கின்றார். அதன்படியே வீட்டுக்கு இரண்டு கோடி ரூபாய் தான் லோன் தர முடியும் என்று சொல்லுகின்றார்கள். இதனால் மீதமுள்ள 70வது லட்சத்துக்கு என்ன செய்வது என்று மனோஜ் ஜோசிக்கிறார்.
அதன் பின்பு அப்பாவுடன் தனியாக கதைக்க வேண்டும் எல்லாரும் வெளியே போங்க என்று சொல்ல, அண்ணாமலை அப்படியெல்லாம் யாரும் போக வேண்டாம் எல்லாரும் இந்த வீட்டு ஆட்கள் தானே நீ என்ன விஷயம் என்று சொல்லு என சொல்லுகின்றார்.
அதற்கு மனோஜ் வீடு வாங்க இன்னும் 70 லட்சம் ரூபாய் வேண்டும். உங்களுடைய வீட்டை விற்று அதில் வரும் பங்கை பிரித்து தந்தால் தாங்கள் வீட்டை வாங்குவதாக சொல்ல, அண்ணாமலை இந்த வீடு விஜயாவோடாது.. உங்க அம்மா கிட்டயே கேளு என்று சொல்ல, அவர் தனக்கென இருப்பது ஒரு வீடு தான். அதனை விற்க முடியாது என்று சொல்லுகின்றார்.
இதன் போது முத்துவுக்கும் மனோஜ்க்கும் இடையில் சண்டை வருகின்றது. அம்மா அப்பாவை கஷ்டப்படுத்துறியா என்று மனோஜை முத்து அடிக்கிறார். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று ரவியும் சொல்லுகிறார்.
மேலும் ரோகிணியின் அப்பாவிடம் காசை கேட்குமாறு முத்து சொல்ல, ரோகிணி அதிர்ச்சி அடைகின்றார். அதன் பின்பு தனது மாமாவுக்கு கால் பண்ணுவதாக வித்யாவுக்கு கால் பண்ணி கதைக்கின்றார். மேலும் அவரிடமும் காசு இல்லை என்று சொல்லுகின்றார்.
இறுதியாக மனோஜ் விஜயாவிடம் கேட்க, வீட்டை விற்க முடியாது. வேறு ஏதும் வழி பார்க்க சொல்லிவிட்டு செல்கிறார் விஜயா. இறுதியாக ரவியும் மனோஜ் ஏன் இப்படி பண்ணுகின்றான் என்று ஸ்ருதியுடன் பேசுகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!