• Sep 16 2026

மகனுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்த அப்பா.. BB குமரன் குறித்து பலரும் அறிந்திடாத உண்மைகள்

shali / 48 minutes ago

Advertisement

Listen News!

குமரன் பகிர்ந்துள்ள தனது வாழ்க்கை அனுபவம் தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகராக வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றுவதற்காக, தனது தந்தை 16 ஆண்டுகளாக பல்வேறு தியாகங்களை செய்து உழைத்ததாக குமரன் தெரிவித்துள்ளார். தனது வயது, உடல்நலம், மகிழ்ச்சி என பலவற்றையும் பொருட்படுத்தாமல், மகனின் கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக தந்தை துணையாக நின்றதாக அவர் கூறியுள்ளார்.


“நீ உன் கனவை பாரு; குடும்பத்தை நான் பார்த்துக்கிறேன்” என்று கூறி, தனது கனவுப் பயணத்தில் தந்தை உறுதுணையாக இருந்ததாகவும் குமரன் உருக்கமாக நினைவுகூர்ந்துள்ளார். இறுதியாக தான் ஒரு ஹீரோவாகி, வெற்றியை அடைந்தபோது அந்த மகிழ்ச்சியை முதலில் தந்தையிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த நேரத்தில் தனது தந்தைக்கு Dementia பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக குமரன் கூறியுள்ளார். தான் சாதித்துவிட்டதாக கூறினாலும், சில நிமிடங்களிலேயே அதை மறந்துவிடுவதாகவும், பின்னர் வேறு விஷயங்களை நினைத்து வருத்தப்படுவதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தனது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த தந்தையிடம், “நான் ஜெயிச்சுட்டேன்” என்று முழுமையான மகிழ்ச்சியுடன் சொல்ல முடியாத நிலை தன்னை மிகவும் பாதிப்பதாக குமரன் பகிர்ந்த இந்த வார்த்தைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement