• Sep 16 2026

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யா–ஜோதிகா திருமணம்.. நிகழ்வில் பங்கேற்காத சிவகுமார்.!

shali / 54 minutes ago

Advertisement

Listen News!

20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை நிறைவு செய்துள்ள நிலையில், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா மீண்டும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக வெளியாகியுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இருவரும் தங்களது மகன் தேவ் மற்றும் மகள் தியா முன்னிலையில் இந்த சிறப்பு நிகழ்வை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


சூர்யா–ஜோதிகா இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த நட்சத்திர ஜோடி, திரையுலகில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான தம்பதியாக இருந்து வருகின்றனர். திருமணத்திற்குப் பிறகும் இருவரும் தங்களது குடும்ப வாழ்க்கையையும், திரைப்பயணத்தையும் அழகாக சமநிலைப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 20 ஆண்டுகளை கடந்துள்ள தங்களது திருமண வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி மட்டும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், சூர்யாவின் தந்தை சிவகுமார் உள்ளிட்ட குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் இடம்பெறவில்லை என்ற தகவலும் கவனம் பெற்றுள்ளது.


முக்கியமாக, சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகன், மகள் ஆகியோரே இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியதாக கூறப்படுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களில் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகின்றனர். இதையடுத்து, இந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement