சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘மூக்குத்தி அம்மன் 2’. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ரெஜினா, சினேகா, குஷ்பூ, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், மைனா நந்தினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனால் படத்தில் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களுக்கும் பஞ்சமிருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும், இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீதும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சுந்தர்.சியின் இயக்கம், நயன்தாராவின் நடிப்பு மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு என ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்கு ஆரம்பம் முதலே மிகப்பெரிய ஹைப் உருவாகியுள்ளது.
இந்நிலையில், படக்குழு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், தற்பொழுது படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது.
டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தீபாவளி ரிலீஸில் ‘மூக்குத்தி அம்மன் 2’ மிகப்பெரிய விருந்தாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
Listen News!