• Sep 19 2026

விஜய் சேதுபதிக்கு திடீரென போன் செய்த விஜய்.. நடந்தது என்ன? முழுவிபரம் இதோ..

shali / 1 hour ago

Advertisement

Listen News!

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, முதலமைச்சர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்தது. விஜய்யின் பெயரை அவர் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், அவரது கருத்துகள் விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் விஜய் சேதுபதியை பலரும் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ள கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

அவர் பேசுகையில், “நான் சஞ்சய் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியிருந்தேன். அதன்பிறகு விஜய் எனக்கு போன் செய்து, ‘நண்பா ரொம்ப நன்றி. அவன் சந்தோஷமாக இருந்தான்’ என்று கூறினார். அவர் எனக்கு போன் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

அவரே ஒரு பெரிய சூப்பர்ஸ்டார். ஆனால் சஞ்சய்க்கு என்னை பிடித்திருக்கிறது என்பது எனக்கு பெரிய ஆச்சர்யமாக இருந்தது. அதை சஞ்சயிடமே கூறியிருக்கிறேன். ‘ஏண்டா, வீட்டில் எவ்வளவு பெரிய ஆளை வெச்சிருக்க’ என்று அவரிடம் சொல்வேன்.

சஞ்சய் தங்கமான பையன். அவருடைய படமும் எங்களுடைய படத்துடன் வெளியாகிறது. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ” என தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சர்ச்சைக்கு மத்தியில் விஜய் சேதுபதி, விஜய் மற்றும் அவரது மகன் சஞ்சய் குறித்து இவ்வாறு பேசியிருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.


Advertisement

Advertisement