• Sep 16 2026

தனுஷ் 56 படத்தின் டைட்டில் இதுதானா? இயக்குநரின் பதிலால் குஷியில் ரசிகர்கள்.!

shali / 43 minutes ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள படம் குறித்து தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, அடுத்ததாக தனுஷை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படம் தற்காலிகமாக ‘தனுஷ் 56’ என அழைக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் மதுரையில் தொடங்க உள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் படத்தின் பூஜை நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், படத்தின் டைட்டில் குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இப்படத்திற்கு ‘படையல்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.

அவர், “படையல் நல்லா இருக்கே.. நான் ஏன் யோசிக்காமல் போனேன்.. சரி ஓகே பேசாம ‘தமிழரசன் பச்சமுத்து படையல்’-ன்னு போட்டு விடுறேன். நன்றி” என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

இதனால் ‘படையல்’ தான் தனுஷ் 56 படத்தின் டைட்டிலா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் இதுவரை படக்குழு அதிகாரபூர்வமாக தலைப்பை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement