• Oct 09 2026

சூரியின் மண்டாடி வசூல் வேறலெவல்.. 5 நாட்களில் இத்தனை கோடியா? வெளியான சூப்பரான அப்டேட்!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

சூரி ஹீரோவாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக, படத்தில் சூரியின் நடிப்பை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். விமர்சன ரீதியாகவும் கவனம் பெற்றுள்ள இப்படம், தற்போது வசூலிலும் சிறப்பான சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறது.

காமெடியனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி, ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக புதிய பயணத்தை தொடங்கினார். அந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நிலையில், தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள ‘மண்டாடி’ திரைப்படமும் அவருக்கு முக்கியமான படமாக அமைந்துள்ளது.

இப்படத்தில் சூரியுடன் சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ‘மண்டாடி’ படத்தின் ஐந்தாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. Sacnilk தகவலின்படி, ஐந்தாவது நாளில் மட்டும் இப்படம் ரூ.11.25 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய நாளை ஒப்பிடும்போது பெரிய சரிவு இல்லாமல் வசூல் தொடர்ந்து வலுவாகவே இருப்பது கவனம் பெற்றுள்ளது.

இதன்மூலம் ‘மண்டாடி’ திரைப்படம் வெளியான ஐந்து நாட்களில் மொத்தமாக ரூ.45.85 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூரியின் தற்போதைய மார்க்கெட்டை பொறுத்தவரை இந்த வசூல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களிலும் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement