• Sep 21 2026

சூரியின் மண்டாடிக்கு இப்படியொரு வரவேற்பா.? உச்சத்தைத் தொட்ட வசூல்..முழுவிபரம் இதோ

shali / 1 hour ago

Advertisement

Listen News!

சூரி நடிப்பில், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான 'மண்டாடி' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது 11 நாட்களை நிறைவு செய்துள்ளது.

படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், முத்துகாளி – சாட்டா புலி ஆகிய கதாபாத்திரங்களுக்கு இடையே ஏற்படும் மோதலும், அதன் காரணமாக உருவாகும் பிரச்சனைகளும் கதையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன. சூரியுடன் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


வெளியானது முதலே மண்டாடி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக படத்தின் வசூலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சூரி ஹீரோவாக நடித்த படங்களில் ரூ.100 கோடி வசூலை கடந்த முதல் படமாக மண்டாடி புதிய சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் பட்டியலிலும் மண்டாடி இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூரியின் திரைப்பயணத்தில் முக்கியமான வசூல் சாதனையாக பார்க்கப்படும் இந்த வெற்றி, படக்குழுவினருக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement