• Sep 21 2026

திருமணமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நெகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்ட சூர்யா.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா தங்களது 20-வது திருமண நாளை வித்தியாசமான முறையில் கொண்டாடிய நிலையில், திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தின் மூலம் இணைந்த சூர்யா - ஜோதிகா, தொடர்ந்து ‘பேரழகன்’, ‘காக்க காக்க’, ‘மாயாவி’, ‘சில்லுனு ஒரு காதல்’ உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். காதலித்து வந்த இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.


இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். திரையுலகில் 20 ஆண்டுகளை கடந்தும் தங்களது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடர்ந்துவரும் இந்த தம்பதிக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தங்களது 20-வது திருமண நாளை முன்னிட்டு சூர்யா - ஜோதிகா வெளிநாட்டில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட நெருங்கியவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த திருமண நிகழ்வின் வீடியோவை ‘தி சீக்குவல்’ எனக் குறிப்பிட்டு இருவரும் வெளியிட்டிருந்த நிலையில், அது இணையத்தில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து சூர்யா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், திருமணத்தை நடத்தி வைத்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் இயற்கை அழகும், அங்கு சந்தித்த அன்பான மனிதர்களும் தங்களது மனதில் என்றும் நீங்காத நினைவுகளாக மாறிவிட்டதாகவும் சூர்யா - ஜோதிகா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement