தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார் நடிகை ரெஜினா. இவர் நெஞ்சம் மறப்பதில்லை , அரண்மனை 3 , சிலுக்குவார்பட்டி சிங்கம் மற்றும் காஷ்மோரா போன்ற படங்களில் நடித்து மக்கள் மனங்களை கவர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இத்தகைய ரெஜினா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது சினிமா பயணம் பற்றி பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில் , சில காலங்களுக்கு முன்பு சினிமாவில் இருந்து விலகலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதாக கூறியிருந்தார். எனினும் , தனக்கு நடிப்பு மீது உள்ள நம்பிக்கை தான் மீண்டும் தன்னை நடிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதாவது , ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலக வேண்டும் என நினைத்தேன். அந்த அளவுக்கு எனக்கு பல தடைகள் இந்த தொழிலில் இருந்தது. எனினும் நடிப்பு மீது உள்ள ஆர்வத்தால் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்தேன் என்றதுடன் அந்த படம் தன்னை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டுபோய் விட்டதாகவும் கூறியுள்ளார்.
Listen News!