• Jan 19 2025

சமந்தா விவாகரத்து பண்ண காரணமே இதுதான்.. கொளுத்தி போட்ட அமைச்சர்..! நாகர்ஜுனா பதிலடி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படுபவர் தான் நாகர்ஜுனா. இவருடைய மகனான நாக சைதன்யாவும் பிரபல நடிகராக காணப்படுகின்றார். 

நடிகர் நாக சைதன்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக காணப்படும் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .ஆனாலும் இவர்களுடைய திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. சுமார் நான்கு ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. இதன் காரணத்தினால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

இதைத் தொடர்ந்து சமீபத்தில் தான் நாகர்ஜுனாவுக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. ஆனால் தற்போது வரையில் சமந்தா சிங்கிளாகவே காணப்படுகின்றார்.

இந்த நிலையில், தெலுங்கானா வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா, சமந்தா - நாக சைதன்யாவின் விவாகரத்துக்கு இதுதான் காரணம் என சர்ச்சையை கிளப்பியுள்ளார். இந்த விஷயம் மிகப்பெரிய பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணத்தினால் தெலுங்கானா அமைச்சருக்கு நாகர்ஜுனா கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


அதன்படி குறித்த அமைச்சர் கூறுகையில், தெலுங்கு திரையுலக நடிகைகளை முன்னாள் முதல்வர் சந்திரசேகரவாவின் மகன் கேடிஆர் மிரட்டினார். நடிகைகளை போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகும் அவர் தான் நாக சைத்னயா - சமந்தா விவாகரத்திற்கு காரணம். நாகார்ஜுனா அண்மையில்  இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட வணிக வளாகத்தை முந்தைய அரசு எதுவும் செய்யாமல் இருக்க கேடிஆர் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார் .

இந்த விவகாரத்தில் சமந்தாவை உள்ளடக்கியது. ஆனால் இதனை விரும்பாமலையே சமந்தா தனது கணவரான நாக சைதன்யாவை பிரிந்தார். மேலும் ராகுல் ப்ரீத் சிங்கின் அவசர திருமணத்திற்கும் கேடிஆர் தான் காரணம் என்று தொடர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இவ்வாறான கருத்துக்களால் ஆவேசமடைந்த நாகார்ஜுனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் வெளியிட்ட பதிவில், அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ள திரை பிரபலங்களின் வாழ்க்கையை உங்களின் தனிப்பட்ட எதிரிகளை விமர்சிப்பதற்காக பயன்படுத்தாதீர்கள். பிறரின் தனி உரிமையை மதியுங்கள். அமைச்சர் என்ற பதவியில் உள்ள பெண்ணான உங்களின் கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எங்கள் குடும்பத்திற்கு முற்றிலும் பொருத்தமற்றவை மேலும் தவறானவை என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement