• Jan 19 2025

லப்பர் பந்து இயக்குனருக்கு ஹரிஷ் கல்யாண் கொடுத்த காஸ்ட்லி கிப்ட் என்ன தெரியுமா? வைரல் வீடியோ

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் ஒன்றுதான் லப்பர் பந்து. இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி வருகின்றது.

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மேலும் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

லப்பர் பந்து படத்தில் ஹாரிஸ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அதிலும் இந்த படத்தில்  அட்டகத்தி தினேஷின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.


இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் கொண்டாடி வருகின்றார்கள். பலரின் பாராட்டுக்களை பெற்ற இந்த படத்தின் சார்பாக இறுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று படக்குழுவினர் மரியாதையும் செலுத்தி உள்ளனர். அதேபோல இளையராஜாவின் படத்தில் அவரது பாடலை பயன்படுத்த அனுமதி அளித்தமைக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கும் லப்பர் பங்கு திரைப்படம் ஆக மொத்தமாக 22 கோடி வசூலித்துள்ளதாம்.

இந்த நிலையில், லப்பர் பந்து படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் தயாரிப்பாளர் தமிழரசன் பச்சமுத்துக்கு தங்க சங்கிலி பரிசளித்துள்ளார் ஹரிஷ் கல்யாண். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement